Tuesday,2nd of October 2012
சென்னை::ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் யான் என்ற படத்தின் மூலம் இயக்குனராகிறார். சில வருடங்களுக்கு முன்புவரை ஒளிப்பதிவுதான் என்னுடைய வேலை படம் இயக்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிந்தவரை இயக்கம் எப்படியோ வீழ்த்திவிட்டது.
இவரின் முதல் படம் யான். ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரிக்கிறது. ஜீவா ஹீரோ.
இந்தப் படத்தில் ஜீவா ஜோடியாக நடிக்க துளசியை தேர்வு செய்திருக்கிறார்கள். இவர் ராதாவின் இளைய மகள், கார்த்திகாவின் தங்கை.
கோ-வில் நடித்த கார்த்திகாவுக்கு பாரதிராஜாவின் அன்னக்கொடி மட்டுமே சொல்லிக் கொள்ளும்படி இருக்கிறது. ஆனால் துளசிக்கு முதல் படம் கடல் வெளிவரும் முன்பே யான் வாய்ப்பு கிடைத்துள்ளது. துளசிக்கு இப்போது 14 வயதுதான் நடக்கிறது என்பது முக்கியமானது.
இதெல்லாம் குழந்தை தொழிலாளர் சட்டத்தில் வராதா பாஸ்?
Comments
Post a Comment