ஆதி பகவன் ஜெயம் ரவி, நீத்து சந்திரா ஜோடி: 12 நாட்கள் தூங்காமல், இரவு, பகலாக கண்விழித்து நடித்திருக்கிறாராம்!
Wednesday,31st of October 2012
சென்னை::அமீர் இயக்கத்தில், உருவாகியுள்ள படம், "ஆதி பகவன் ஜெயம் ரவி, நீத்து சந்திரா ஜோடி சேர்ந்துள்ள இப்படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட, 150 நாட்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள பூஜ், ராஜஸ்தானில் ஜெய்சால்மீர் மற்றும் கோவா, ஜதராபாத், மும்பை போன்ற நகரங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, க்ளைமேக்ஸ் சண்டை காட்சி, பிரபலமான ஒரு கோட்டையில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்காக, பலதரப்பட்ட கெட்டப்புகளில் நடித்துள்ள ஜெயம் ரவி, ஒரு சண்டைக் காட்சியில், 60 அடி உயரத்தில், ரோப் எதுவுமே அணியாமல், உயிரை பணயம் வைத்து நடித்தாராம். மேலும், பாங்காக்கில் படப்பிடிப்பு நடந்த போது, 12 நாட்கள் தூங்காமல், இரவு, பகலாக கண்விழித்து நடித்திருக்கிறாராம்
Comments
Post a Comment