அமெரிக்காவின் முக்கிய நகரமான சான் பிரான்ஸிஸ்கோவில் நவம்பர் 11-ம் தேதி இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி!!!

Wednesday,10th of October 2012
சென்னை::அமெரிக்காவின் முக்கிய நகரமான சான் பிரான்ஸிஸ்கோவில் நவம்பர் 11-ம் தேதி இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடக்கிறது.

100க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் மற்றும் தமிழ்சினிமாவின் முன்னணிப் பாடகர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்கின்றனர்.

வரும் நவம்பர் 3-ம் தேதி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கனடா தலை நகர் டொரண்டோவில் நடக்கிறது. இதற்கு தமிழ் உணர்வாளர்கள் என்ற பெயரில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இளையராஜாவின் இன்னொரு நிகழ்ச்சி அமெரிக்காவின் சான்ஃபிராஸ்சிஸ்கோ நகரில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

வரும் நவம்பர் 11-ம் தேதி நடைபெற உள்ள இந்தக்கச்சேரியை ஸ்வாகத் கேர் ஃபவுண்டேஷன் ஏற்பாடு செய்துள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா,கார்த்திக் ராஜா, பவதாரிணி, கே.ஜே.ஜேசுதாஸ்,ஹரிஹரண், கே.எஸ்.சித்ரா, சாதனா சர்கம், மனோ, கார்த்திக், விஜய் யேஸுதாஸ், ஸ்வேதா மேனன் உட்பட நிகழ்ச்சியில் பாடவிருக்கும் முன்னணி பாடகர்கள் பங்கேற்க உள்ளனர். இசை ரசிகர்கள் நிகழ்ச்சியைக் காண ஆர்வமாக உள்ளனர்.

ஆனால் வெறும் அறிக்கை ஆர்ப்பாட்டக்காரர்கள் இதற்கு என்ன சொல்லப்போகிறார்களோ!

Comments