Monday,8th of October 2012
சென்னை::மந்திராலயம் கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 கோடி நன்கொடை வழங்க உள்ளார். மந்திராலயத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தரான நடிகர் ரஜினிகாந்த், இக்கோயிலுக்கு அடிக்கடி வருவது வழக்கம். மேலும் இக்கோயிலின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பலமுறை நன்கொடை வழங்கியுள்ளார்.
இது குறித்து கோயில் நிர்வாக அதிகாரிகளான மாதவசெட்டி, சுயமிந்தரா சாரி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஸ்ரீராகவேந்திரர் கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 கோடி நன்கொடை வழங்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இந்த நன்கொடை மூலம் மண்டபம் பின்புறமுள்ள பழைய கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு பக்தர்கள் தங்கும் ஏசி வசதியுடன் கூடிய 25 அறைகள் கட்டப்படும். மேலும் 100 அறைகளும் கட்டப்பட உள்ளது. இதுதவிர கோயில் சுற்றியிலும் பூங்காக்கள் அமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments
Post a Comment