ஒரே படத்தில் 10 ஹீரோக்களுடன் நடிக்கிறார் வித்யாபாலன்!!!

Sunday,7th of October 2012
சென்னை::ஒரே படத்தில் 10 ஹீரோக்களுடன் நடிக்கிறார் வித்யா பாலன். தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் படம் ‘சொக்க நாதன்’. இதை வி.சி.வடிவுடை யான் தயாரித்து இயக்குகிறார். அவர் கூறியதாவது: ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படத்தை அடுத்து நான் இயக்கும் படம் ‘சொக்க நாதன்’. கரண் உள்ளிட்ட 10 ஹீரோக்கள் நடிக்கின்றனர். மற்ற நடிகர்களிடம் பேச்சு நடந்து வருகிறது. வித்யா பாலன் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இது ஒரு ஆக்ஷன் கதை.

பிறந்து வளர்ந்த யாருமே முன்னோர்களை நினைத்துப் பார்ப்பதில்லை. சில தலைமுறைகளுக்கு பிறகு அவர்களின் பெயர்கள்கூட மறந்துவிடுகிறது. தற்போது வாழும் தலைமுறையினருக்கு மறைந்த முன்னோர்கள் நேரில் வந்து வழிகாட்டினால் அது எப்படிப்பட்ட வாழ்க்கையாக இருக்கும் என்பதே கதை. இதில் கிராபிக்ஸ் காட்சிகள் முக்கிய இடம் வகிக்கும். இதற்காக ஹாலிவுட் ஸ்டுடியோவில் தொழில்நுட்ப பணிகள் நடக்க உள்ளது என்றார்.

Comments