007 படம் ‘ஸ்கைஃபால் நாளை மறுநாள் ரிலீஸ்!!!

Wednesday,24th of October 2012
சென்னை::ரூ.800 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள ஜேம்ஸ்பாண்ட் படம் ‘ஸ்கைஃபால்’ நாளை மறுநாள் ரிலீசாகிறது. ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையின் 23வது படம் ‘ஸ்கைஃபால்’ ரூ.800 கோடி செலவில் தயாராகி, நாளை மறுநாள் ரிலீசாக உள்ளது. சாம் மெண்டஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ஜேம்ஸ் பாண்டாக டேனியல் கிரெய்க் (44) அவருக்கு ஜோடியாக நவோமி ஹாரிஸ் (36) நடித்துள்ளனர். கவர்ச்சிக்காக பிரான்ஸ் நடிகை பெரனிஸ் மர்லோ (33) நடித்துள்ளார்.

இப்படத்தின் பிரத்யேக காட்சி லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹால் அரங்கில் நேற்று திரையிடப்பட்டது. இங்கிலாந் தில் 26ம் தேதியும், இந்தியாவில் நவம்பர் 1ம் தேதியும் படம் ரிலீசாகிறது. ஜேம்ஸ் பாண்டாக சீன் கானரி நடித்த ‘டாக்டர் நோ’ படம் 1962ம் ஆண்டு வெளியானது. இதுதான் முதல் ஜேம்ஸ் பாண்ட் படமாகும். இது வெளியானதன் பொன்விழா தற்போது கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ‘ஸ்கைஃபால்’ வெளிவருவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments