
சென்னை::அனுஷ்காவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்தது நிஜம்தான். அதில் ஆபாசம் இருக்காது என்றார் ஆர்யா. செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்’ படத்தில் நடிக்கிறார் ஆர்யா. ஜோடி அனுஷ்கா. இப்படத்தில் அனுஷ்காவுடன் நெருக்கமான காட்சிகளில் ஆர்யா நடித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் கூறியதாவது: செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்’ படத்தில் முதன்முறையாக அனுஷ்காவுடன் நடிக்கிறேன். ஆக்ஷன், காமெடி மற்றும் சென்டிமென்ட் ஆகிய எல்லா அம்சங்களும் இதில் உள்ளது. படத்தின் மையக் கதை லவ்தான். இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். இதில் ஒருவேடம் கல்லூரி மாணவன். ஜார்ஜியாவில் இதன் ஷூட்டிங் நடந்தது. இங்கு அடிப்படை வசதிகள் கூட கிடைக்கவில்லை. ரெஸ்ட் ரூம், மின்சாரம், ஏன் படுத்து தூங்குவதற்கு பெட் கூட கிடையாது. இதற்கெல்லாம் உச்சமாக குளிர், அதிகபட்ச வெயில் என கஷ்டப்பட்டோம். இப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆண்களுக்கு மத்தியில் ஒரே பெண்ணாக அனுஷ்கா சிக்கிக் கொண்டார். இவ்வளவு வசதி பற்றாக்குறை இருந்தும் அவர் ஒருமுறைகூட அதுபற்றி புகார் கூறவில்லை. வேறு யாராவது அந்த இடத்திலிருந்தால் பிரச்னை செய்திருப்பார்கள். காதல் கதை என்பதால் இதில் நெருக்கமான காட்சிகள் இருக்கிறது. அனுஷ்காவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்தது நிஜம்தான். ஆனால் அது ஆபாசமாக இருக்காது. கவித்துவமாக படமாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஆர்யா கூறினார்.
Comments
Post a Comment