
சென்னை::எம்.டிவி’ பிரபலங்களை வைத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இசை, நாட்டியம் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை வைத்து சிறப்பு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குகிறது.
‘எம்.டிவி’யின் இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது ஆகும். ஏற்கனவே ஒரு சீஸன் இசை நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியது. தற்போது இசை நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனை தொடங்க உள்ளது.
‘மியூசிக் ஷோ’ இரண்டாவது சீஸனில் பிரபல இசைக் கலைஞர்களுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் கலந்து கொண்டு பாடுகிறார். இதுபற்றி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர் கூறியதாவது:-
இந்த முறை இசை உலகில் முன்னணியில் உள்ளவர்களை வைத்து இந்த நிகழ்ச்சியை தயாரிக்க திட்டமிட்டோம். இந்நிகழ்ச்சியில், ஏ.ஆர்.ரகுமானும் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியின் மிகப்பெரிய சொத்து அவர்தான்.
இந்த நிகழ்ச்சி தொடரில் லக்கி அலி, கைலாஷ் கேர் ஆகியோரும் பங்கேற்கின்றனர். இருவரும் இசை உலகில் பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர்கள். டிரம் கலைஞர் ரஞ்சித் பரோம் மற்றும் பிறதுறை கலைஞர்களும் கலந்து கொள்கின்றனர்.
பாகிஸ்தான் பாடகர் அதிப் ஆலம் வருவார் என எதிர்பார்க்கிறோம். நவம்பர் மாதம் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சிக்கான ஷ¨ட்டிங், அடுத்த வாரம் தொடங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment