சதாவின் க‌ல‌க்க‌ல் கவ‌ர்‌ச்‌சி‌ப் பட‌ம் மைதிலி!!!

Thursday,6th of September 2012
சென்னை::ஒரு பாடலுக்கு ஆட்டம் என்பதுவரை இறங்கிவந்துவிட்டார் சதா. இனி இறங்குவதற்கு படிகள் இல்லை. கடைசி முயற்சியாக மைதிலி என்ற படத்தில் நடிக்கிறார். இதில் என்ன ஆச்ச‌‌ரியம் என்று நினைக்கலாம். விஷயம் இருக்கிறது.

நவ்தீப் ஜோடியாக சதா நடிக்கும் இந்தப் படத்தில் பிகினி உடையில் சதா தோன்றுகிறார். இதுவொரு சாம்பிள் செய்தி. பிகினி தவிர நெருக்க்க்க்கமான காட்சிகள் நிறைய. தமிழ் ரசிகர்களை ஓரங்கட்டும் நோக்கத்துடன் தயாராகி வருகிறது மைதிலி.

தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் வழியாக மீண்டும் அந்நியன், ஷங்கர், விக்ரம் என்று கனவு காண்கிறார் சதா. பிரமிளா, ஷகிலா என்று வேறொரு கனவுடன் கரன்சியை எச்சில் தொட்டு எண்ணி வருகிறது ஒரு கோஷ்டி.

நமக்கென்னவோ கரன்சி கனவுதான் கைகூடும் என்று தெ‌ரிகிறது. உங்களுக்கு?
சதா கவர்ச்சி, மைதிலி, நவ்தீப்

Comments