Wednesday,12th of September 2012
சென்னை::கன்னட ஹீரோ தர்ஷனுடன் தொடர்ந்து நடிப்பேன் என்றார் நிகிதா. சரோஜா படத்தில் நடித்தவர் நிகிதா. தர்ஷனுடன் தொடர்ந்து 3 படங்களில் நடித்தார் நிகிதா. அப்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. இதையடுத்து தர்ஷனுக்கும் அவரது மனைவி விஜயலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், விஜயலட்சுமியை தாக்கினார் தர்ஷன். விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் தர்ஷனை போலீசார் கைது செய்தனர். பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். குடும்பத்தில் பிரச்னை ஏற்பட நிகிதாதான் காரணம் என குற்றம் சாட்டினார் விஜயலட்சுமி. இதனால் சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டது. கன்னட படங்களில் நடிக்க நிகிதாவுக்கு தடையும் விதிக்கப்பட்டது. பின் இந்த தடை விலக்கப்பட்டது. இப்போது மீண்டும் தர்ஷன் ஜோடியாக கன்னட படமொன்றில் நடிக்க உள்ளார் நிகிதா. இது பற்றி அவர் கூறியதாவது: பழைய விஷயங் கள் எதை பற்றியும் நான் யோசிப்பதில்லை. தர்ஷனுடன் இதற்கு முன் 3 படங்களில் சேர்ந்து நடித்தேன். இப்போது மீண்டும் நாங்கள் ஜோடியாக நடிக¢கிறோம். இதற்கு முன் தர்ஷன் என்னுடன் எப்படி நட்பாக பழகினாரோ அதேபோல்தான் பழகுகிறார். நானும் அப்படித்தான். எங்களுக்குள் வேறு எந்த உறவும் கிடையாது. அதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. தர்ஷனுடன் தொடர்ந்து படங்களில் நடிப்பேன். இவ்வாறு நிகிதா கூறினார்.

Comments
Post a Comment