
சென்னை::நயன்தாராவுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரச்னை ஏதும் இல்லை. அவர் எனது தோழி என்கிறார் டாப்ஸி. இது குறித்து அவர் கூறியது: அஜீத், நயன்தாரா, ஆர்யா, ராணா ஆகியோருடன் சேர்ந்து நடிக்கிறேன். விஷ்ணுவர்தன் இயக்கும் இப்பட ஷூட்டிங் எப்போதோ தொடங்கிவிட்டது. சமீபத்தில்தான் நான் இப்பட ஷூட்டிங்கில் பங்கேற்றேன். பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் நடிக்கப் போகிறோம் என்ற படபடப்பு இருந்தது. முதல்நாள் அந்த படபடப்பில் இருந்தேன். ஆனால் எல்லோருமே முதல் நாளிலே எனக்கு நெருக்கமாகிவிட்டார்கள்.ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாராவுடன் பிரச்னையா என கேட்கிறார்கள். இதை கேட்டு சிரிப்புதான் வருகிறது. இரண்டு ஹீரோயின்கள் ஒரே செட்டில் இருந்தாலே அங்கு பிரச்னை வந்துவிடுமா? அப்படி எதுவுமே இல்லை. நயன்தாரா பழகுவதற்கு இனிமையானவர்.
எனது ஷெட்யூலை முடித்து போகும்போது அவருடன் நெருங்கிவிட்டேன். நாங்கள் இப்போது நல்ல தோழிகளாக ஆகிவிட்டோம். அஜீத்தும் எனது பயத்தை தெரிந்துகொண்டு, ஷூட்டிங்கில் இயல்பாக நடிக்கவும் எல்லோருடனும் இயல்பாக பழகவும் உதவினார். இரண்டாவது நாளிலே நான் சகஜ நிலைக்கு வந்துவிட்டேன். இப்படத்தில் நான் அஜீத்துக்கு ஜோடியா, ஆர்யா அல்லது ராணாவுக்கு ஜோடியா என கேட்கிறார்கள். அது சஸ்பென்ஸ். படம் வரும்போது ரசிகர்களுக¢கு அது தெரிந்துவிடும். இவ்வாறு டாப்ஸி கூறினார்.
Comments
Post a Comment