அடுத்த சூப்பர் ஸ்டார் ஐஸ் வைத்தார் ஹீரோயின்; அலறினார் ஹீரோ!!!

Thursday,6th of September 2012
சென்னை::அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவார் என்று விபா பேசியதால், சென்னை 28 விஜய் வசந்த் அதிர்ச்சி அடைந்தார். மேடைக்கு ஓடி வந்து விபாவின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்தார். சென்னை 28, நாடோடிகள் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் விஜய் வசந்த். இவர் ஹீரோவாக நடிக்கும் படம் ‘மதில் மேல் பூனை. பரணி ஜெயபால் இயக்குகிறார். கண்ணன் தயாரிக்கிறார். கணேஷ் ராகவேந்திரா இசை அமைக்கிறார். இதன் பாடல் சிடி வெளியீட்டு விழா நேற்று நடந்தது. பின்னர் நிருபர்களுக்கு பட குழுவினர் பேட்டி அளித்தனர். மேடையில் ஹீரோயின் விபா பேசும்போது, ‘நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடம். சண்டைகாட்சிகளுடன் காட்டுப்பகுதியில் நடிக்க வேண்டிய சவாலான வேடம் என்பதால் உடனே ஒப்புக்கொண்டேன். காட்டில் அட்டை பூச்சிகள் கடிக்கு எல்லோருமே ஆளானோம். அட்டை பூச்சிகளிடமிருந்து தப்பிக்க எப்போதும் கையில் மூக்குபொடி வைத்துக்கொண்டு அதை தூவியபடி இருந்தோம். இதில் விஜய் வசந்த் ஹீரோவாக நடிக்கிறார். ஏற்கனவே பல படங்களில் நடித்து, அனுபவம் உள்ள அவரது நடிப்பு யதார்த்தமாக அமைந்தது. அடுத்த சூப்பர் ஸ்டாராக இவர் வருவார் என்றார். விபாவின் பேச்சை கேட்டதும் விஜய் வசந்த் அதிர்ச்சி அடைந்தார். மைக் முன் ஓடிவந்து, ‘நான் நடிகனாக இந்த அளவுக்கு வந்ததே பெரிய விஷயம். இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க கேட்டபோதுகூட மறுத்தேன். இயக்குனர் வற்புறுத்தியதால் ஒப்புக்கொண்டேன். என்னைப்போய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று விபா கூறியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்றைக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்றார்.

Comments