
சென்னை::மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. சமீபத்தில் நியூயார்க்கில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான கருத்தரங்க விழாவில் கலந்துகொண்டார். அப்போது தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்தார். மேலும் உடல் உறுப்பு தானம் குறித்து நடக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்க உள்ளதாகவும் கூறினார். இந்நிகழ்ச்சியில் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மருத்துவ மைய நிர்வாக¤ தாமஸ் ஸ்டாரல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அமெரிக்காவில் உள்ள ரோசஸ்டர் மருத்துவ மைய பல்கலைக்கழகத்தில்தான் பிரியங்கா சோப்ராவின் தந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment