Sunday,23rd of September 2012
சென்னை::நடிகர் ஜீவா தற்போது நீதானே என் பொன்வசந்தம், டேவிட், என்றென்றும் புன்னகை, யான் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இவரது முகமூடி படம் சமீபத்தில் ரிலீசானது. இந்த படம் பலரை கவர்ந்தது. சிலர் விமர்சித்தனர். இதுகுறித்து ஜீவா கூறியதாவது:-
முகமூடி படம் எங்களுக்கு திருப்தியாக இருந்தது. வசூலில் தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக உள்ளார். விநியோகஸ்தர்களும் திருப்தியாக உள்ளனர். படத்தில் ரசிகர்கள் எல்லோரையும் திருப்தி்ப்படுத்த முடியாது. 70 சதவீதம் பேர் விரும்புவார்கள். 30 சதீதம் பேர் படம் நன்றாக இல்லை என்பார்கள்.
அடுத்த படங்களில் பிடிக்காதவர்களுக்கும் பிடிப்பதுபோல் நடிக்க முயற்சி எடுப்பேன். மிஸ்கினுக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது போல் செய்திகள் பரவி உள்ளன. எல்லோரும் கஷ்டப்பட்டு பணியாற்றினோம். எங்களுக்குள் எந்த மனக்கஷ்டமும் இல்லை.
அடுத்து கவுதம்மேனன் இயக்கத்தில் நடித்த நீதானே என் பொன்வசந்தம் படம் ரிலீசாக உள்ளது. இதன் பாடல்கள் ஏற்கனவே வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படத்தில் உடல் எடையை குறைத்து பள்ளி மாணவன் கேரக்டரில் நடித்து உள்ளேன். நான் நடித்துள்ள டேவிட் படமும் விரைவில் ரிலீசாக உள்ளது.
இவ்வாறு ஜீவா கூறினார்.
Comments
Post a Comment