Thursday,27th of September 2012
சென்னை::மரியான், ரஞ்சனா படங்களில் நடித்து வரும் தனுஷ் அடுத்து சற்குணத்தின் சொட்டவாளக்குடி படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கும் என தெரிகிறது.
களவாணி காதல், காமெடி என பாக்ஸ் ஆஃபிஸில் பெயரை தக்க வைத்துக் கொண்டது. வாகை சூட வா விமர்சன ரீதியாக பெயரை தந்தாலும் கலெக்சன் கால் கிணறு தாண்டவில்லை. இதனால் களவாணி ஸ்டைலில் சற்குணம் இயக்கும் படம்தான் சொட்டவாளக்குடி.
இந்தப் படத்தில் தனுஷ் குத்து விளக்கு வியாபாரியாக வருகிறாராம். அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை, நாம் அகழ்ந்து ஆராய்ந்த தகவல் இது.
இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க ஹன்சிகாவை அணுகியிருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. வேட்டை மன்னன், வாலு என இரு சிம்பு படங்களில் ஹன்சிகா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment