விபத்து இழப்பீடுகளை தடுக்க ரஜினி, கமல், ஆர்யா படங்களுக்கு இன்சூரன்ஸ்!!!

Wednesday,12th of September 2012
சென்னை::திரைப்படங்களை தயாரித்து ரிலீஸ் செய்யும் வரை தயாரிப்பாளர்கள் நிறைய சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. படப்பிடிப்பு அரங்குகளில் எதிர்பாராத தீ விபத்து, வெள்ளம், நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு காயம் ஏற்படுதல் என பல கஷ்டங்கள் ஏற்படுகின்றன.

இவற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள படங்களை இன்சூரன்ஸ் செய்ய துவங்கியுள்ளனர். ஏற்கனவே விக்ரம் நடித்த 'ராவணன்', 'ராஜபாட்டை' சமீபத்தில் ரிலீசான 'முகமூடி', 'நான் ஈ' படங்கள் இன்சூரன்ஸ் செய்யப்பட்டன.

'ராவணன்', படஅரங்கு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதற்காக ரூ.30 லட்சம் இன்சூரன்ஸ் மூலம் நஷ்டஈடு பெறப்பட்டதாம். ரஜினி நடிக்கும் 'கோச்சடையான்', கமல் நடிக்கும் 'விஸ்வரூபம்', ஆர்யாவின் 'இரண்டாம் உலகம்', மணிரத்னம் இயக்கும் 'கடல்', பாலா இயக்கும் 'பரதேசி' படங்கள் இன்சூரன்ஸ் செய்யப்பட்டு உள்ளன.

இதுகுறித்து தயாரிப்பாளர் ஒருவர் கூறும் போது, சமீபத்தில் படப்பிடிப்பு குழுவை சேர்ந்தவர் அடிபட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். படத்தை இன்சூரன்ஸ் செய்து இருந்ததால் அவருக்கு மருத்துவ செலவாக ரூ.1 1/2 லட்சம் கிடைத்தது என்றார். இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையாக படத்தின் மொத்த பட்ஜெட்டில் இருந்து 0.3.ல் இருந்து 1 சதவீதமே வசூலிக்கின்றனர்.

Comments