
சென்னை::மிஷ்கின், கௌதம் என்று முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த செய்தி வந்தது, அகமது இயக்கத்தில் ஜீவா நடிக்கிறார். அகமது வாமனன் என்ற ஒரேயொரு சுமார் படத்தை இயக்கியவர், அதுவும் ஹாலிவுட் காப்பி.
இதன் காரணமாக அகமது பற்றிய செய்தி உடான்ஸாக இருக்கும் என்றே பலரும் எண்ணினர். ஜீவா ஜோடி த்ரிஷா, படத்துக்கு பெயர் என்றென்றும் புன்னகை என்று மேலும் தகவல்கள் வந்த போது நம்பாமலிருக்க முடியவில்லை. இறுதியில் படப்பிடிப்பும் தொடங்கியது.
என்றென்றும் புன்னகையின் ஃபிளாஷ்பேக்கை சொல்ல காரணம் இருக்கிறது. முகமூடி படத்தில் பிஸியாக இருந்ததால் இதுவரை ஜீவா இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. அதுவும் த்ரிஷாவுடன் இப்போதுதான் காம்பினேஷன் காட்சி எடுக்கிறார்கள். இது பற்றி தெரிவித்திருக்கும் த்ரிஷா ஜீவா, சந்தானம், வினய் ஆகியோருடன் நடித்தது நன்றாக இருந்ததாக தெரிவித்திருக்கிறார். முக்கியமாக இந்த ஞாயிற்றுக்கிழமை படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். ஞாயிறு வேலை பார்த்தது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
விடுமுறை நாளில் வேலை பார்த்தும் த்ரிஷா என்றென்றும் புன்னகையுடன் இருப்பது ஆச்சரியம்தான்.
Comments
Post a Comment