
சென்னை::சிம்பு நடிக்கும் வாலு பட தலைப்புக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த தலைப்பை ஏற்கனவே பதிவு செய்திருக்கும் நிறுவனம், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளது. ‘மைனா படத்தில் நடித்த தம்பி ராமையாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தெய்வசிகாமணி. இவர் இயக்கும் படம் ‘வாலு. இது பற்றி அவர் கூறியதாவது: வாலு பட தலைப்பை நாங்கள்தான் முதலில் பதிவு செய்தோம். அந்த தலைப்பு எங்களிடம் இருக்கிறது. இதை மீறி சிம்பு படத்துக்கு வாலு என தலைப்பு வைத¢துள்ளனர். இது பற்றி அவர்களிடம் கேட்டபோது, பதில் எதுவும் கூறவில்லை. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளோம். சென்னையிலிருந்து திருவண்ணாமலை சென்ற ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்தான் எங்கள் ‘வாலு கதை. இளைஞன் ஒருவன் டீன் ஏஜ் பருவத்தில் தடுமாறிப்போனால் அவன் வாழ்க்கை முழுவதும் எவ்வாறு திசை திரும்பிப்போகிறது என்பதே கதை. காதல், காமெடி, சென்டிமென்ட் கலந்து உருவாகும் இதன் ஷூட்டிங் தண்டராம்பட்டு, சென்னை ஆகிய இடங்களில் நடக்கிறது. அகில் ஹீரோ. சரண்யா ஹீரோயின். தம்பி ராமையா, கோவை சரளா, சிங்கம்புலி, ஜோமல்லூரி, சாய்ரமணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சிட்டிபாபு ஒளிப்பதிவு. செல்வகணேஷ் இசை. இளவரசன் தயாரிப்பு.
Comments
Post a Comment