தமிழ் படங்களில் நடிக்க விடாமல் சதி: நடிகை தமன்னா புகார்!!!

Sunday,23rd of September 2012
சென்னை::தமிழ் படங்களில் நடிக்க விடாமல் சதி நடப்பதாக நடிகை தமன்னா ஆதங்கப்படுகிறார். 'கேடி' படம் மூலம் 2005-ல் தமன்னா அறிமுகமானார். கல்லூரி படம் பிரபலபடுத்தியது. தனுஷ், பரத் ஜோடியாக நடித்தார். சூர்யா ஜோடியாக நடித்த “அயன்” படம் முன்னணி நடிகை அந்தஸ்தை உயர்த்தியது.

கார்த்தியுடன் நடித்த 'பையா; படம் ஹிட்டானதால் மார்க்கெட் இன்னும் உயர்ந்தது. தொடர்ந்து சிறுத்தை, சுறா, வேங்கை, படங்களில் நடித்தார். தற்போது திடீரென தமிழ்ப்பட வாய்ப்புகள் நின்று போய் உள்ளது.
தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்தியிலும் ஹம்மத் வாலா படத்தில் நடிக்கிறார். ஆனால் தமிழ் படங்களில் நடிக்க யாரும் அழைக்கவில்லை. தமிழ்ப்பட உலகினர் தன்னை ஒதுக்குவதாக நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார். தமிழ்ப்பட வாய்ப்புகள் தனக்கு கிடைக்க விடாமல் யாரோ மறைமுகமாக சதி செய்வதாகவும் புகார் கூறி வருகிறார்.

இந்தி, தெலுங்கு படங்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். விஜயகாந்த் நடித்து வெற்றிகரமாக ஓடிய ரமணா படம் இந்தியில் “ரீமேக்” ஆகிறது. இப்படத்தில் அக்ஷய்குமார் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

Comments