சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் - முதலிடத்தில் முகமூடி!!!

Wednesday,5th,of,September 2012
சென்னை::


5. மிரட்டல்
ஐந்து வாரங்கள் முடிந்த நிலையில் மிரட்டல் 1.53 கோடியை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் ஒரு லட்சத்துக்கும் குறைவு என்பது கவலை தரும் செய்தி.


FILE4. நான் ஈ
ஒன்பது வாரங்கள் கடந்த பின்பும் ஒரு தெலுங்கு டப்பிங் படம் சென்னை பாக்ஸ் ஆஃபிஸின் டாப் 5-க்குள் இடம்பிடிப்பது ஆச்ச‌ரியம். இதுவரை 6.28 கோடிகளை வசூலித்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் 4.8 லட்சங்களை வசூலித்துள்ளது. வார நாட்களில் வசூல் 6.5 லட்சங்கள்.

3. நான்
த்‌ரில்லரான இப்படம் சென்ற வார இறுதியில் 25.9 லட்சங்களையும், வார நாட்களில் 26.7 லட்சங்களையும் வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 1.41 கோடி.

2. அட்டகத்தி
அட்டகத்தி வார இறுதியில் 24.3 லட்சங்களையும், வார நாட்களில் 29 லட்சங்களையும் வசூலித்துள்ளது. விளம்பரத்தால் இது வசூலித்தது இதுவரை 3.1 கோடிகள்.

1. முகமூடி
ரசிகர்கள் பரவாயில்லை என்றும் விமர்சகர்கள் சராச‌ரிக்கு கீழ் என்றும் வகைப்படுத்தியிருக்கும் முகமூடி முதல் மூன்று தினங்களில் 1.5 கோடியை வசூலித்துள்ளது. மிஷ்கின், ஜீவா, சூப்பர்ஹீரோ... ம்.. இது கொஞ்சம் குறைவான வசூல்தான்.

Comments