Thursday,27th of September 2012
சென்னை::ஷூட்டிங் திட்டம் மாற்றி அமைத்ததால் காஜல் பட வாய்ப்பு பறிபோகிறது. ‘துப்பாக்கி’ படத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இது தவிர இந்தி, தெலுங்கில் 8க்கும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். இதற்காக மும்பை, ஐதராபாத், சென்னை மற்றும் வெளிநாடுகளுக்கு ஷூட்டிங்கில் பங்கேற்க பறந்த வண்ணம் இருக்கிறார். பல நாட்கள் பயணத்திலேயே செலவாவதால் புதிய பட வாய்ப்புகள் பறிபோகும் சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில் டோலிவுட்டில் மகேஷ்பாபு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். சில நாட்கள் ஷூட்டிங்கிலும் பங்கேற்று நடித்தார். ஆனால் தொடர்ந்து கால்ஷீட் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் ஷூட்டிங் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து காஜலை நீக்கிவிட்டு மற்றொரு முன்னணி ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய அப்படத்தின் இயக்குனர் முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி பட தயாரிப்பாளரிடம் காஜல் கூறும்போது,‘ஏற்கெனவே கொடுத்த கால்ஷீட்டை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. புதிதாக மாற்றி அமைத்திருக்கும் ஷூட்டிங்கிற்கு ஏற்ப தற்போது கால்ஷீட் அட்ஜஸ்ட் செய்து தர முடியாத சூழல் உள்ளது’ என்றார். இதையடுத்து மகேஷ்பாபுக்கு ஜோடியாக நடிக்க வேறு ஹீரோயினை தேடிக்கொண்டிருக்கிறார் இயக்குனர்
Comments
Post a Comment