சர்ச்சையில் பர்ஃபி!!!

Thursday,27th of September 2012
சென்னை::இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் பர்ஃபி படம் குறித்து சர்ச்சை வெடித்துள்ளது.

இந்தியாவில் நல்ல படம் ஏதாவது வெளிவந்தால், இது எந்தப் படத்தின் காப்பியாக இருக்கும் என்று தேடுவது சகஜமாகிவிட்டது. பெரும்பாலான இயக்குனர்கள் பிற மொழிப் படங்களை உருவிதான் படமெடுக்கிறார்கள்.

பர்ஃபி படத்தையும் அந்த லிஸ்டில் சேர்க்கும் வேலை நடந்து வருகிறது. இந்தப் படத்தில் ஹீரோ ரன்பீhpன் மேன‌ரிஸங்கள் சார்லி சாப்ளினை ஒத்திருக்கும். இன்னும் சிலர் இத்தாலி படமான லைஃப் இஸ் பியூட்டிஃபுல் ஹீரோவை ஒத்திருப்பதாக கூறுகிறார்கள்.

எதுவாக இருந்தாலும் இந்த விஷயம் பர்ஃபியை பாதிக்கப் போவதில்லை. இன்ஸ்பிரேஷன் என்றே எடுத்துக் கொள்ளப்படும். அதேநேரம் படத்தின் இறுதிக்காட்சி ஹாலிவுட் படத்தின் காப்பி என்றொரு சர்ச்சை புதிதாக கிளம்பியுள்ளது. இது குறித்து இன்று படத்தின் இயக்குனர் அனுராக் பாஸு விளக்கம் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்ச்சை உண்மையாக இருந்தால் ஆஸ்கர் விருதுப் போட்டியில் இந்திய சினிமாவுக்கு அவமானம் நிச்சயம்.

Comments