Saturday, 29th of September 2012
சென்னை::யுடிவி நிறுவனம் தயாரித்த இந்திப் படம் 'பர்ஃபி' மாபெரும் வெற்றிப் பெற்றதுடன் அமோகமான வசூலையும் குவித்து வருகிறது. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய யுடிவி நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதில் சிம்புவை நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தையில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், யுடிவி நிறுவனம் தயாரித்த 'முகமூடி' படத்தில் ஜீவா நடித்திருப்பதால். அவரையே 'பர்ஃபி' ரீமேக்கிலும் ஜீவாவையே நடிக்க வைக்கலாமே, என்றும் அந்த நிறுவனம் யோசித்து வருகிறதாம்.
இது பற்றி எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் சிம்பு மட்டுமே கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் இது தொடர்பாக பேசுகையில், "பர்ஃபி' சிறந்த படம். மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த படத்தை இரண்டு முறை நான் பார்த்திருக்கிறேன். இதன் ரீமேக்கில் நடிப்பது குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்லமுடியாது." என்றார்.
ரன்பீர்கபூர், பிரியங்கா சோப்ரா, இலியானா ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கும் 'பர்ஃபி' ஆஸ்கார் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் கலந்துகொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment