குத்துப்பாட்டுக்கு ஆடமாட்டேன்: ஸ்ருதிஹாசன்!!!

Monday,24th of September 2012
சென்னை::நடிகை ஸ்ருதி ஹாசன் தெலுங்கு படமொன்றில் குத்துப்பாட்டுக்கு ஆடப் போவதாக தகவல் வெளியானது. இதில் நாயகனாக ராம்சரன் தேஜா நடிக்கிறார். வி.வி. நாயக் இயக்குகிறார். இப்படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட ஸ்ருதியை அணுகியதாகவும் அவர் ஆட சம்மதித்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இதனை ஸ்ருதி மறுத்துள்ளார். அவர் கூறும் போது தெலுங்கு படத்தில் குத்துப்பாட்டுக்கு நான் ஆடவில்லை. படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன் என்றார்.

தெலுங்கில் ஹிட்டான நூஒஸ்தண்டே நே ஒட்டன் டானா படம் இந்தியில் ரீமேக் ஆகியது. பிரபுதேவா இயக்குகிறார். இதில் ஸ்ருதி நாயகியாக நடிக்கிறார். இப்படம் மூலம் இந்தி மார்க்கெட்டை பிடிக்க திட்டமிட்டுள்ளார். அசின் இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார். திரிஷாவும் இந்தி படத்தில் நடித்துள்ளார்.

Comments