
சென்னை::சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் 'மதகஜ ராஜா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. வில்லன்களுடன் விஷால் மோதும் சண்டைக்காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது.
இந்த சண்டைக்காட்சி படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஷால், தடுமாறி தலை குப்புற விழுந்தார். இதனால் விஷாலுக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டது. பதறிய படக்குழுவினர், உடனடியாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அவரை சேர்த்தார்கள்.
மருத்துவர்கள் விஷாலுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். பல்வேறு உடல் பரிசோதனைகளும் செய்யப்பட்டது. பின்னர் விஷாலுக்கு பயப்படும் படி எதுவும் இல்லை என்றும் அவர் நன்றாக இருக்கிறார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தார்கள். தலையில் அடி பட்டிருப்பதால் சில நாட்கள் ஒய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதால், விஷால் தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். படப்பிடிப்பும் சில நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment