Sunday,23rd of September 2012
சென்னை::இந்தி டி.வி. சேனலில் பிரபலமான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ நடந்து வருகிறது. பிரபலங்களை அழைத்து வீடு ஒன்றில் தங்க வைப்பார்கள். அவர்களின் வெளி உலக தொடர்புகள் துண்டிக்கப்படும் செல்போன் வைத்துக் கொள்ளவும் அனுமதி இல்லை.
அறைக்குள் ரகசிய கேமரா வைத்து அவர்களின் நடவடிக்கைகளை நடுவர்கள் கண்காணிப்பார்கள். இந்த ஷோவில் நடுவராக இந்தி நடிகர் சல்மான்கான் உள்ளார்.
ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க நித்யானந்தா சாமியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அழைப்பு வந்ததை நித்யானந்தாவின் உதவியாளர் உறுதிபடுத்தினார். ஆனால் ரியாலிட்டி ஷோவில் நித்யானந்தா பங்கேற்பாரா என்பது உறுதியாக தெரிய வில்லை.
Comments
Post a Comment