பெற்றோர் எதிர்ப்பால் மனமாற்றம்: திரிஷா,ராணா காதல் முறிவு?!!!

Saturday, 29th of September 2012
சென்னை::திரிஷாவும்,தெலுங்கு நடிகர் ராணாவும் தீவிரமாக காதலிப்பதாக செய்திகள் வெளிவந்தன. இருவரும் படவிழாக்களுக்கு கைகோர்த்து வந்தார்கள். விருந்துகளிலும் ஜேடியாக பங்கேற்றார்கள். நண்பர் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் விடிய, விடிய அருகருகே அமர்ந்து காதல் கிறக்கத்தில் பேசிக்கொண்டிருந்ததாக செய்திகள் பரவின.


மும்பை பத்திரிகை ஒன்றுக்கு நெருக்கமாக 'போஸ்' கொடுத்தனர். திரிஷா, ராணா காதல் விவகாரம் தமிழ், தெலுங்கு பட உலகில் பற்றி எறிந்ததால் ராணா குடும்பத்தினர் உஷாரானார்கள். இருவரின் காதலுக்கும் முட்டுக்கட்டை போட்டார்கள்.

ராணா குடும்பத்தினர் ஆந்திராவில் பெரும் கோடீஸ்வரர்களாக உள்ளனர். திரையுலகிலும் கொடிகட்டி பறக்கிறார்கள். திரிஷாவை காதலிக்க வேண்டாம் என்று ராணாவுக்கு அவர்கள் நிர்ப்பந்தம் கொடுத்தனர். திரிஷா பெற்றோரை அழைத்தும் கண்டித்து அனுப்பியதாக செய்திகள் பரவின.

இதற்கிடையில் குடும்பத்தினர் எதிர்ப்பதால் திரிஷாவுடனான காதலை முறித்துக் கொள்ள ராணா முடிவு செய்து இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.திரிஷாவுடனான சந்திப்பை தவிர்ப்பதாகவும் கூறப்படுகிறது.


சமீபத்தில் ராணா சென்னை வந்து ஓரிரு நாட்கள் தங்கி விட்டு, ஐதராபாத் திரும்பி உள்ளார். அவர் சென்னை வந்தபோது திரிஷா இங்கேதான் இருந்தாராம். அவருக்கு தனது வருகை பற்றி ராணா தெரிவிக்கவில்லையாம். அவர் புறப்பட்டுச் சென்ற பிறகுதான், திரிஷாவுக்கு விஷயம் தெரிந்ததாம். இதனால் அவர் ராணா மேல் ஆத்திரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ராணா எதற்காக சென்னை வந்தார் என்று விசாரிக்கிறாராம்.

Comments