
சென்னை::அஜீத்துடன் நடிப்பதற்கு பயமாக இருக்கிறது என்றார் டாப்ஸி. விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் அஜீத் ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். இதற்கிடையில் தெலுங்கில் ரவி தேஜாவுடன் அவர் நடித்துள்ள ‘தருவு’ படம், தமிழில் ‘புல்லட் ராஜா’ என்ற பெயரில் மொழி மாற்றம் ஆகிறது. இதுபற்றி டாப்ஸி கூறியதாவது: ஒருவழியாக விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடிப்பதற்கான காஸ்டியூம் ஒத்திகை, வசன ஒத்திகை முடிந்தது. விரைவில் அதில் பங்கேற்கிறேன். இதில் நடிப்பதற்கு நடுக்கமாகவே இருக்கிறது. காரணம் இதில் அஜீத் நடிக்கிறார். முதல்முறையாக அவருடன் நடிக்கிறேன். நயன்தாரா, ஆர்யாவும் இதில் நடிக்கின்றனர். பயமும் நடுக்கமும் இருந்தாலும் ஷூட்டிங்கில் பங்கேற்கும் நாளுக்காக காத்திருக்கிறேன். தெலுங்கில் ரவி தேஜாவுடன் நடித்துள்ள ‘தருவு’ படம், தமிழில் ‘புல்லட் ராஜா’ என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது. பிரபு, ஜெயசுதா, பிரமானந்தம், ஷாயாஜி ஷிண்டே, அவினாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறிய தவறுகள் செய்யும் ரவிதேஜா என்னை காதலிக்கிறார். ஆனால், ஏற்கனவே சுஷாந்துடன் எனக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. ரவி தேஜா என்னை காதலிப்பதை அறிந்து அவரை சுஷாந்த் தீர்த்து கட்டுகிறார். எமலோகம் செல்லும் ரவி தேஜா, தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக எமனிடம் வாக்குவாதம் செய்து வேறொருவர் உடல் வழியாக திரும்பி பூலோகம் வருகிறார். அதன்பிறகு நடப்பது என்ன என்பது கதை. விஜய் ஆண்டனி இசை அமைத்திருக்கிறார். இவ்வாறு டாப்ஸி கூறினார்.
Comments
Post a Comment