சென்னை பாக்ஸ் ஆபிஸ் - அட்டகத்தியை முந்திய முகமூடி!!!

Tuesday,11th of September 2012
சென்னை::

5. நான் ஈ
கடந்த திங்கள் முதல் வியாழன்வரை சென்னையில் நான் ஈ 3.7 லட்சங்களையும், வெள்ளி முதல் ஞாயிறுவரை 2.9 லட்சங்களையும் வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 6.35 கோடிகள்.

4. அட்டகத்தி
ஆரம்ப ஜோர் தணிந்து அட்டகத்தி நான்காவது இடத்துக்கு கீழிறங்கியது. வார தினங்களில் 8 லட்சங்களையும், வார இறுதியில் 3.4 லட்சங்களையும் வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் சென்னை வசூல் 3.26 கோடிகள்.

3. பாகன்
ஸ்ரீகாந்த் நடிப்பில் சென்ற வாரம் வெளியான பாகன் முதல் மூன்று தினங்களில் 15.4 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.

2. நான்
நியாயமான படம் என்றால் நீடித்து நிற்கும். அட்டகத்தியுடன் வெளியான இப்படம் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. வார நாட்களில் 11.5 லட்சங்களும், வார இறுதியில் 8.4 லட்சங்களும் வசூலித்து இந்த இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை சென்னையில் இதன் வசூல் 1.61 கோடி.

1. முகமூடி
பரவலான நெகடிவ் விமர்சனத்துக்குப் பிறகும் சென்னையில் படத்தின் வசூல் திருப்திகரமாகவே உள்ளது. வார நாட்களில் 1.13 கோடியை வசூலித்த இப்படம் வார இறுதியில் 1.06 கோடியை வசூலித்து முதலிடத்தை பிடித்துள்ளது. ஏழு நாட்களில் இரண்டு கோடிக்கும் மேல் வசூலித்திருப்பது ஆரோக்கியமான விஷயம். பத்தே தினங்களில் சென்னையில் 3.7 கோடிகளை வசூலித்து அட்டகத்தியின் நான்குவார வசூலை கடந்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

Comments