வாக்கு கொடுத்த இயக்கம் டோஸ் விட்ட நடிகர்!

Wednesday,19th of September 2012
சென்னை::பாலிவுட்ல இலியான நடிகை அறிமுகமான பர்பி படம் சக்கை போடு போடுதாம்...இதனால சவுத்ல அவருக்கு போட்டியா இருந்த மூணுஷா, நயனம், அனுஷ், கல்லூரி, மழை நடிகைகள் கடுப்பாகி இருக்காங்களாம்... பாலிவுட்ல இந்த மாதிரி ஒரு படம் எனக்கு கிடைக்கலையேன்னு மூணுஷாவும் மழை நடிகையும் சேர்ந¢து புலம்புறாங்களாம்... இதுக்கிடையே பாலிவுட்ல டேரா போட்டிருக்கிற பிசின் நடிகைக்கு இலியை பார்த்து இப்போவே கிலி ஏற்பட்டிருக்காம்...சேது இயக்கம், திரும்ப ஃபைட்கோழி நடிகரை வச்சி படம் இயக்கப்போறதா சொல்லியிருக்காரு. வழக்கமா கதை எழுதிட்டு ஹீரோவை புக் பண்ற இயக்கம், இந்த முறை அப்படி பண்ணலையாம்... காரணம், அடுத்த படத்துக்கு தேவையான டப்புவை திரட்டி தர்றேன்னு நடிகரு வாக்கு கொடுத்தாராம்...அப்படி தந்தா, அதுல நீதான் ஹீரோன்னு இயக்கமும் வாக்கு கொடுத்துட்டாராம்...

கன் பட டைட்டில் பிரச்னை தீராததால பஞ்ச் நடிகரு கடுப்பாக¤ போயிருக்காராம்... இனிமே பட தலைப்பை புக் பண்ணும்போது, அந்த மாதிரி தலைப்புல வேற யாராவது புக் பண்ணியிக்காங்களான்னு பாருங்க. அப்படி பண்ணயிருந்தா அந்த தலைப்பே எனக்கு வேணாம். தலைப்பு பிரச்னையால படத்தை விளம்பரம் பண்ண கூட முடியலேன்னு தன்னோட அப்பாவை லெப்ட் ரைட் வாங்கிட்டாராம்...

Comments