Sunday,23rd of September 2012
சென்னை::பிரியங்கா சோப்ராவுக்கு நடனம் கற்று தந்த மாஸ்டரிம் நடனம் கற்கிறார் தீபா ஷா. ‘யுத்தம் செய் படத்தில் பயிற்சி பெண் போலீஸ வேடம் ஏற்றவர் தீபா ஷா. தற்போது சில்லுனு ஒரு சந்திப்பு படத்தில் 2 நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: அறிமுகப்படத்தில் பயிற்சி பெண் போலீசாக வேடம் ஏற்றிருந்தேன். சில்லுனு ஒரு சந்திப்பு எனது 2வது படம். விமல் ஜோடியாக நடிக்கிறேன். கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய காதல் படம். இப்படத்தில் எனக்கு 2 பாடல்கள் உள்ளன. நடனத்தில் நான் பயிற்சி பெற்றிருக்காவிட்டாலும் இப்போது அதற்கான பயிற்சியில் இருக்கிறேன். பாலிவுட் ஹீரோயின்கள் கேத்ரினா, பிரியங்கா சோப்ராவுக்கு பயிற்சி அளித்த மாஸ்டர் விரு கிருஷ்ணாஜியிடம் கதக் பயின்று வருகிறேன். இவ்வாறு தீபா ஷா கூறினார்.
Comments
Post a Comment