
சென்னை::நீது சந்திரா தயாரித்துள்ள போஜ்புரி படமான ‘தேஸ்வாÕ தெற்கு ஆசிய நாடுகளில் நடந்த திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டதுடன் அலகாபாத்திலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அட்மினிஸ்ட்ரேஷனிலும் திரையிடப்படுகிறது.
ரஜினி நடித்துள்ள ‘சிவாஜிÕ படம் 3டியில் டோக்கியோவில் நேற்று திரையிடப்பட்டது. விரைவில் ‘கோச்சடையான்Õ படத்தின் ஆடியோ ரிலீஸும் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கார்த்திக் மகன் கவுதம், ராதா 2வது மகள் துளசி அறிமுகமாகும் ‘கடல்Õ பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு படத்தை திரையிட்டு பார்த்த மணிரத்னம், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ரிதேஷ் தேஷ்முக்கை காதல் திருமணம் செய்த ஜெனிலியா இன்னமும் மராட்டிய மொழி கற்க முடியாமல் சிரமப்படுகிறாராம்.
நீண்ட காலமாக தனது கார் டிரைவராக பணியாற்றி வருபவருக்கு அனுஷ்கா புதிய கார் ஒன்றை சமீபத்தில் பரிசளித்தார்.
சென்னையில் லேக் ஏரியா பகுதியில் லிப்ட் வைத்து பங்களா கட்டியிருக்கும் ஸ்ரீகாந்த், தனது வீட்டில் ஒரு அறையில் மினி தியேட்டர் அமைத்திருப்பதுடன் படுத்துக்கொண்டே படம் பார்க்கும் வகையிலான நவீன குஷன் இருக்கைகளும் அமைத்திருக்கிறார்.
பாரதிராஜா இயக்கத்தில் ‘அன்னக்கொடியும் கொடி வீரனும்' படத்தில் ஒரு வருடமாக நடித்து வந்த கார்த்திகா அப்படத்தின் ஷூட்டிங் முடிந்து அடுத்து அருண் விஜய்யுடன் ‘டீல்' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
பார்வையற்றவர்களுக்கு நலநிதி திரட்டுவதற்காக விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன் நடித்திருக்கும் ‘தாண்டவம்' படத்தின் சிறப்பு காட்சி சத்யம் தியேட்டரில் உள்ள 6திரை அரங்குகளிலும் வரும் 27ம் தேதி இரவு 10 மணிக்கு திரையிடப்படுகிறது.
ஷங்கர் இயக்கும் ‘ஐ' படத்தை இந்தியிலும் இயக்கப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் இதை இயக்குனர் தரப்பு மறுத்திருக்கிறது.
‘இரண்டாம் உலகம்' பட ஷூட்டிங் முடித்த கையோடு உதய்ப்பூரில் உள்ள லேக் பேலஸ் ஓட்டலுக்கு மனைவி கீதாஞ்சலி, குழந்தை லீலாவதியுடன் சென்று விடுமுறையை கழித்தார் இயக்குனர் செல்வராகவன்.
Comments
Post a Comment