அடுத்தடுத்து பெரிய படங்கள் ரிலீஸ்: தள்ளிப்போகிறது கமலின் விஸ்வரூபம்!!!

Wednesday,19th of September 2012
சென்னை::அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆவதால் விஸ்வரூபம் பட ரிலீசை கமல்ஹாசன் தள்ளிப்போட்டிருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன், ஆண்ட்ரியா நடித்துள்ள படம் விஸ்வரூபம். இப்படத்தை கமலே எழுதி இயக்கியுள்ளார். இப்பட ஷூட்டிங் முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிந்துவிட்டது. ஜூலை இறுதியில் இப்படம் திரைக்கு வர வேண்டியது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சவுண்ட் எபெக்டை படத்தில் பயன்படுத்த நினைத்தார் கமல். இதற்காக ஒரு மாதம் கழித்து படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த மாதமே படம் திரைக்கு வர வேண்டும். ஆனால் அதுபோல் நடக்கவில்லை. இப்போது ஒரேடியாக அடுத்த ஆண்டு ஜனவரியில் படத்தை ரிலீஸ் செய்வதாக தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

இப்படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆவதும் விஸ்வரூபம் படத்தை தள்ளிப்போட காரணமாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இம்மாதம் விக்ரம் நடித்துள்ள தாண்டவம், அடுத்த மாதம் சூர்யா நடித்துள்ள மாற்றான், நவம்பரில் விஜய்யின் துப்பாக்கி, அதையடுத்து மணிரத்னத்தின் கடல், ரஜினியின் கோச்சடையான் படங்கள் ரிலீசாக உள்ளன. இதனால்தான் கமல் தனது படத்தை தள்ளிப்போட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் அதை நீக்கிவிட்டு, ரகசியமாக படத்துக்கு ரீஷூட் நடப்பதாகவும் திரையுலகில் பேச்சு அடிபடுகிறது. இதற்கெல்லாம் தமிழ் மீடியாவுக¢கு பதில் சொல்ல வேண்டும் என்பதால் படம் தள்ளிப்போன அறிவிப்பை கமல்ஹாசன் இங்கு வெளியிடவில்லை. அதற்கு பதிலாக மும்பையில் உள்ள ஒரு வெப்சைட்டுக்கு இந்த தகவலை தந்துள்ளார்.

Comments