Thursday,27th of September 2012
சென்னை::தாண்டவம் வருகிற 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். தெலுங்கில் சிவதாண்டவம். அதே 28 சிவதாண்டவத்தையும் வெளியிடுவதாக ஏற்பாடு.
ஆந்திராவில் நேரடி தெலுங்குப் படங்களுக்கு கிடைக்கும் வரிச்சலுகை டப்பிங் படங்களுக்கு கிடையாது. டப்பிங் என்றால் 30 சதவீத வரி செலுத்தியாக வேண்டும். ஒரு கோடி வசூலித்தால் 30 லட்சங்கள் வரியாக தர வேண்டும்.
இதிலிருந்து தப்பிக்க சிவதாண்டவம் நேரடி தெலுங்குப் படம் தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் எடுத்தது என சிவதாண்டவம் உரிமையை வாங்கியவர் ஒரு கரடியை விட்டுப் பார்த்தார். சிவதாண்டவம் உரிமையை ஜஸ்ட் மிஸ் செய்தவர்கள் காண்டா மிருகத்தையே பார்த்தவர்கள். மோசடி செய்வதாக புகார் தந்து சிவதாண்டவத்தின் வெளியீட்டையே முடக்கியிருக்கிறார்கள்.
ஏற்கனவே தாண்டவம் கதைத் திருட்டு நீதிமன்றத்தில் உள்ளது (பணம் கொடுத்து பிரச்சனையை அமுக்கிவிட்டதாகவும் கேள்வி). இந்நிலையில் சிவதாண்டவமும் சிக்கலில்.
எந்த நேரத்தில் கதையை திருடினார்களோ..
Comments
Post a Comment