புதிய சிம்ரன், ஜோதிகா வருகிறார்கள்: இயக்குனர் வசந்த் தகவல்!!!

Wednesday,19th of September 2012
சென்னை::வசந்த் இயக்கி வரும் புதிய படம் 3 பேர் 3 காதல். இதில் 3 பேர்களின் தனித்தனியான காதலை சொல்லி அதனை ஒரு புள்ளியில் இணைப்பது மாதிரியான கதை. அர்ஜுன், விமல் ஹீரோக்களாக நடிக்கிறார்கள், ஹீரோயின்களா லாசினி, சுர்வீன் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர தாமிரபரணி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமான பானு இன்னொரு நாயகியாக நடிக்கிறார். தன் படத்தின் நாயகிகள் பற்றி வசந்த் இப்படிச் சொல்கிறார்.

"நான் இதுவரை சிம்ரன், ஜோதிகா, சூர்யா, ரமேஷ் அரவிந்த் உள்பட 15 புதுமுகங்களை அறிமுகப்படுத்தி உள்ளேன். பல ஹீரோக்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். பல ஹீரோக்களுக்கு திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் இப்போது வெற்றி பெற்ற திறமையாளர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். திறமையாளர்களை என்னால் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும் அந்த அடிப்படையில் சொல்கிறேன்.

3 பேர் 3 காதல் படத்தில் நான் அறிமுகப்படுத்தும் லாசினி சிம்ரன் இடத்தை நிரப்புவார். சுர்வீன் ஜோதிகாக இடத்தை நிரப்புவார். (அருகில் உள்ள படத்தில் இருப்பவர்). பானு நல்ல திறமையான நடிகை. அவரது திறமையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் படங்கள் அமையவில்லை. இந்தப் படத்தில் அவரது முழு திறமையும் வெளிப்படும். இதற்கு பிறகு பானு பெரிய ரவுண்ட் வருவார்" என்றார்.

Comments