


சென்னை::பிரபு சாலமன் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற மைனா படத்தை அடுத்து விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடித்து உள்ள கும்கி படத்தை திருப்தி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமி தயாரித்து இருந்தார். இப்போது இந்த படம் முடிவடைந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். இந்த நிறுவனம் கடைசியாக வெளியிட்ட படம் புது முகங்கள் நடித்த அட்ட கத்தி படமாகும். இதை அடுத்து கும்கி ரிலீஸ் எப்போது செய்யலாம் என்று பேச்சு வார்தையில் உள்ளனர். மேலும் அடுத்த மாதம் இறுதியில் மிக பிரமாண்ட முறையில் ரிலீஸ் செய்ய ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
Comments
Post a Comment