Saturday, 29th of September 2012
சென்னை::நகுல்,பூர்னா,சந்தானம் நடித்த கந்த கோட்டை படத்தை இயக்கிய சக்திவேல் ஈகோ என்னும் பெயரில் புதிய படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் வேலு என்னும் புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார்.இவர் அமெரிக்காவில் பொறியியல் படித்தவர்.நாயகியாக அனஸ்வரா நடிக்கிறார்.விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் புகழ் பெற்ற பாலா காமெடி வேடத்தில் நடிக்கிறார்.
ஏ.வி வசந்த ஒளிப்பதிவு செய்கிறார்.காஷ் விலன்ஸ் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.தினா பின்னணி இசை அமைத்துள்ளார்.கேபிள் ஷங்கர் வசனம் எழுதியுள்ளார்.எடிட்டிங் -எம்.பாலா,கலை-சிவசங்கர்,நடனம்-காதல் கந்தாஸ்,அசோக் ராஜா.விவேகா பாடல்களை எழுதியுள்ளார்.விபி ஸ்டில்ஸ் பி.ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.மக்கள் தொடர்பு-நிகில்.
படம் பற்றி இயக்குனர் சக்திவேல் கூறியபோது, "அழகான பொய்கள் மற்றும் எதிர்பாராத சம்பவங்களால் உண்டான நட்பு,காதல்,வெறுப்பு மற்றும் ஈகோ நாயகன் நாயகி வாழ்கையை புரட்டி போடுகின்றன.அதன் பிறகு அவர்கள் வாழ்க்கையில் என்ன ஆகிறது என்பது தான் கதை. இந்த கதையை நகைச்சுவையோடு கலகலப்பாக எல்லா தரப்பினரும் ரசிக்கும் படி சொல்லியிருகிறோம்." என்றார்.
முதல் கட்ட படப்பிடிப்பு கோவை,பொள்ளாச்சி மற்றும் உடுமலையில் நடைபெற்றுள்ளது. இரண்டாம் கட்ட படபிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடைபெற்றது.பாடல்கள் நியூசிலாந்தில் படமாக்கப்பட்டன. இறுதிகட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் திரைக்கு வருகிறது இந்த படம்

Comments
Post a Comment