ரஜினி சார் பார்த்துட்டாரு நான் பார்க்கல - அலுத்துகொண்ட ஸ்ரேயா!!!

Tuesday,18th of September 2012
சென்னை::'சிவாஜி' படம் 3டி யில் உருவாவதைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதற்காக பல்வேறு நாடிகளில் உள்ள ரஜினி ரசிகர்கள் 'சிவாஜி' படத்தில் பங்குபெற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அழைத்து அவர்களை கெளரவப்படுத்தி வருகிறார்கள்.

அப்படிதான் சிவாஜி படத்தின் ஹீரோயினான ஸ்ரேயாவையும் சமீபத்தில் டோக்கியோவில் உள்ள ரசிகர்கள் அழைத்திருக்கிறர்கள். இந்த அழைப்பை ஏற்று ஜப்பானுக்கு சென்ற ஸ்ரேயாவுக்கு, அங்குள்ள ரஜினி ரசிகர்கள் தடபுடலான வரவேற்பு அளித்து அசத்தி விட்டார்களாம்.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்ரேயா, "சிவாஜி படம் 3டி யில் உருவாவது எனக்கு சந்தோஷம் தான். காரணம் நான் நடிச்ச முதல் 3டி படம் சிவாஜி. ரஜினி சார் சிவாஜி 3டி படத்தை பார்த்துட்டாரு. ஆனா நான் இன்னும் பார்க்கல." என்று அலுத்துகொண்டாராம்.

Comments