கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Thursday,6th of September 2012
சென்னை::பாலிவுட் நடிகைகள் விளம்பர படங்களில் நடிக்க போட்டிபோட்டு கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர். சமீபத்தில் சேலை விளம்பரத்துக்காக ஒப்பந்தம் ஆன வித்யாபாலன் ரூ.5 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார்.

இரண்டாம் உலகம்Õ ஷூட்டிங்கிற்காக ஜார்ஜியா சென்ற ஆர்யா சென்னை திரும்பியதையடுத்து கண்ணன் இயக்கும் ‘சேட்டைÕ பட ஷூட்டிங்கில் நடித்து வருகிறார்.

விவேக் ஓபராய் இந்தி பட ஷூட்டிங்கிற்காக காதலியுடன் பைக்கில் செல்லும் காட்சியில் நடித்தபோது அவரை அடையாளம் தெரியாத டிராபிக் போலீஸ்காரர் வழிமறித்து லைசன்ஸ் காட்டும்படி வற்புறுத்தினார்.

சுப்ரமணியபுரம், ‘போராளி படங்களில் நடித்த சுவாதி ‘அமென் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.

தங்க மீன்கள், ‘சமர், ‘ஆதிபகவன், ‘மூன்றுபேர் மூன்று காதல், ‘வேட்டை மன்னன் படங்களுக்கு இசை அமைத்து வரும் யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபுவின் ‘பிரியாணி படத்திற்கு இசை அமைப்பதன் மூலம் 100 படங்களை நிறைவு செய்கிறார்.

நான் ஈ படத்தில் நடித்த சுதீப் நடிக்கும் ‘சக்ராயுதா கன்னட படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.

திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார் ரம்பா. இவரது சகோதரர் வாசு மீண்டும் படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இருமொழியில் தயாரிக்கும் இப்படத்தில் நகுலன் நடிக்க உள்ளார். இதில் ரம்பா சிறு வேடத்தில் நடிப்பாராம்.

தீபிகா படுகோன் மும்பையில் புது பங்களா கட்டியுள்ளார். அவரது அழைப்பை ஏற்று பங்களாவுக்கு வந்த அமிதாப்- ஜெயா பச்சன் தம்பதிக்கு தடபுடல் விருந்தளித்தார் தீபிகா.

அக்டோபர் 5ம் தேதியை உலக ஜேம்ஸ்பாண்ட் தினமாக அப்படங்களை தயாரித்த ஹாலிவுட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் டைம் ஆங்கில இதழின் முதல்பக்க அட்டையில் ஆமிர் கான் போட்டோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்குமுன் இந்திய நட்சத்திரங்களில் பர்வின் பாபி, ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் படங்கள் மட்டுமே அந்த இதழ் அட்டையில் வெளியிடப்பட்டது.

* இம்மாத இறுதியில் தொடங்கி அடுத்த மாதம் இரண்டாவது வாரத்துக்குள் விஜய் நடித்த துப்பாக்கி, விக்ரம் நடித்த தாண்டவம், சூர்யா நடித்துள்ள மாற்றான் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது.
* பாடகர் கிரீஷை மணந்தபிறகு புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த சங்கீதா சீக்கிரமே அம்மாவாகப்போகிறார். சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நடந்தது.
* இந்தியில் ‘பா, ‘சீனி கம் படங்களை இயக்கிய பால்கி தமிழ்நாட்டுக்காரர். விரைவில் தமிழ் படம் இயக்குகிறார்.
* வில்லன் நடிகர் வித்யுத் ஜாம்வால் சமீபத்தில் தனது வீட்டுக்குள் நுழைந்த திருடர்களுக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தார்.
* டோலிவுட் படமொன்றில் நாகார்ஜுனாவுடன் குத்துபாட்டுக்கு ஆட்டம் போடுவதற்காக லட்சுமி ராய்க்கு வந்த வாய்ப்பு தற்போது சார்மிக்கு கைமாறிவிட்டது.

Comments