
சென்னை::கமல்ஹாசனை விட ஸ்ருதி நல்ல டான்சரா என கேட்டதற்கு பதிலளித்தார் பிரபு தேவா. இந்தி பட தயாரிப்பாளர் ரமேஷ் தவ்ரானியின் மகன் அறிமுகமாகும் படத்தை இயக்குகிறார் பிரபுதேவா. இந்த படத்தில் ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். பட ஷூட்டிங்கிற்கு முன்பாக நடிகர்களுக்கு குறிப்பிட்ட கேரக்டருக்கான நடிப்பு பயிற்சி, வசன உச்சரிப்பு பயிற்சி அளிக்க முகாம் நடத்துவார்கள். ஆனால் பிரபு தேவா தான் இயக்கும் பட ஷூட்டிங்கை தொடங்குவதற்கு முன் நடிகர், நடிகைகளுக்கு டான்ஸ் பயிற்சி அளிக்கிறார். இந்தி படத்தில் நடிக்கும் ஸ்ருதிக்கும் இதுபோல் டான்ஸ் பயிற்சியை கடந்த ஒரு வாரமாக அவர் அளித்தார். இது பற்றி பிரபு தேவா கூறியதாவது: தெலுங்கில் நான் இயக்கிய முதல் படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறேன். தமிழில் ஜெயம் ரவி, த்ரிஷா நடிப்பில் உனக்கும் எனக்கும் என்ற பெயரில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்த கேரக்டருக்கு ஸ்ருதி கச்சிதமாக பொருந்துவார். அவர் ராசியில்லாத நடிகை என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்டது பற்றி எனக்கு சிறிதும் கவலை இல்லை. ஒரு ஹிட் கொடுத்துவிட்டால் அந்த பேச்செல்லாம் எழவே எழாது. ஸ்ருதி கடினமாக உழைக்கிறார். பெரிய நடிகரின் மகள் என்ற பந்தா எல்லாம் அவரிடம் கிடையாது. ஒரு சாதாரண பெண் போலத்தான் அவர் இருக்கிறார். அவரது நடன திறமையை பற்றி கேட்கிறார்கள். அவர் நல்ல டான்ஸர். பயிற்சியின்போது ஒருமுறை சொல்லிக் கொடுப்பதை தவறு இல்லாமல் செய்து காட்டுகிறார். கமல்ஹாசனை விட நல்ல டான்சரா என கேட்டால், முழு படத்திலும் அவருடன் பணியாற்றிய பின்பே அதை சொல்ல முடியும். இவ்வாறு பிரபுதேவா கூறினார்.
Comments
Post a Comment