Thursday,27th of September 2012
சென்னை::புன்னகைப்பூவே படத்திலிருந்து அவ்வப்போது யுவன் படங்களில் தலைகாட்டுவதுண்டு. கடைசியாக பில்லா 2. மீண்டும் அவர் ஆடிப்பாடப் போகிற படம் ஆதலால் காதல் செய்வீர்.
சசீந்திரன் இயக்கும் இந்தப் படத்தின் வேலைகள் பெருமளவு முடிந்துவிட்டன. அக்டோபர் 12 ஆம் தேதி படத்தின் பாடல்களை வெளியிடலாம் என்று இருக்கிறார்கள். மொத்தம் ஆறு பாடல்கள். இதில் நான்கை மட்டுமே பட வெளியீட்டுக்கு முன்பு வெளியிடுகிறார்கள். மீதி இரு பாடல்கள் படத்தின் கதையை சொல்லும்விதமாக இருப்பதால் படத்தில் மட்டும் இடம்பெறுமாம்.
ஆறில் ஒரு பாடலுக்கு யுவனை நடிக்க வைக்கும் திட்டம் சுசீந்திரனுக்கு இருக்கிறது. யுவனும் அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். விரைவில் குறிப்பிட்ட அந்தப் பாடலை படமாக்கயிருக்கிறார்கள்.
அக்டோபர் 12 சத்யம் சினிமாஸில் பாடல் வெளியீட்டு விழா நடக்கிறது.
Comments
Post a Comment