Monday,10th of September 2012
சென்னை::மறுமணம் செய்ய திட்டமா?' என்றதற்கு பதில் அளித்தார் பிரபு தேவா. நயன்தாரா பிரிவுக்கு பிறகு பாலிவுட் படங்களை இயக்குவதில் முழு கவனம் செலுத்துகிறார் பிரபு தேவா. கடந்த 2 வருடமாக மும்பையில் தங்கி இருக்கும் அவர், தற்போது வாடகை வீடு எடுத்து குழந்தைகளுடன் குடியேறிவிட்டார். இது பற்றி பிரபுதேவா கூறியதாவது: சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளேன். அதற்கான கதை இன்னும் தயாராகவில்லை. வான்டட் படத்தில் அவரை இயக்கியபோது பயமாக இருந்ததா என்கிறார்கள். சல்மானை கடந்த 15 வருடமாக எனக்கு தெரியும்.
முதலில் எப்படி பழகினாரோ அதேபோல்தான் இப்போதும் பழகுகிறார். அவரை இயக்கும்போது எனக்கு பயம் இல்லை. ஆனால் பட ரிலீஸின்போது பயமாகவும் பதற்றமாகவும் இருந்தது. பாலிவுட், கோலிவுட் இரண்டு படவுலகிலும் பணியாற்றியதற்கு வித்தியாசம் எதுவும் இல்லை. அதிக பொருட்செலவில் படங்கள் உருவாவதால் இங்கும் கடுமையாக உழைக்கிறார்கள். படத்தை தொடங்கும்போதே ரிலீஸ் தேதியும் அறிவிக்கிறார்கள். அதேபோல் திட்டமிட்டு படத்தை முடிக்கிறார்கள். அக்ஷய் குமார் நடித்த ‘ரவுடி ரத்தோர்' படத்தில் கவுரவ தோற்றத்தில் விஜய்யை நடிக்க கேட்டேன்.
சொன்னபடி நடித்துக்கொடுத்தார். இதற்காக அவர் சம்பளம் எதுவும் வாங்கவில்லை. நட்புக்காக அவர் நடித்ததை கண்டு அக்ஷய் குமார் ஆச்சரியப்பட்டார்.
பாலிவுட்டிற்கு சென்று 3 வருடம் ஆகிவிட்டது. இந்தி பேசினால் புரிந்துகொள்வேன். சில நேரம் வசனங்களைகூட சொல்வதுண்டு. இப்போதைக்கு படம் இயக்குவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். எந்தநேரமும் நான் அங்கிருக்க வேண்டிய அவசியம் இருப்பதால் மும்பையில் வாடகை வீடு எடுத்து தங்கி விட்டேன். சொந்த வீடு வாங்கிவிட்டதாக வரும் தகவல் தவறு.
‘மறுமணம் செய்துகொள்வீர்களா?' என கேட்கிறீர்கள். இப்போதைக்கு எனது திருமணம் பற்றி எந்த எண்ணமும் இல்லை. அதுபற்றி நினைக்க எனக்கு நேரமும் இல்லை. 24 மணி நேரமும் வேலையிலேயே மூழ்கி இருக்கிறேன்.

Comments
Post a Comment