ஹெலிகாப்டரில் இருந்து கீழேவிழுந்த நடிகைகள் பிந்து மாதவி, பியா படுகாயம்!!!

Friday,21st of September 2012
சென்னை:::'சட்டம் ஒரு இருட்டறை' படப்பிடிப்பின் போது நடிகைகள் பிந்து மாதவி, பியா இருவரும் மேலே பறந்த ஹெலிகாப்படரில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்திருக்கிறார்கள். எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் விஜயகாந்த நடித்த 'சட்டம் ஒரு இருட்டறை' படம் மாபெரும் வெற்ரி பெற்றது. தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்ட இப்படம் அனைத்திலும் வெற்றி பெற்றது. 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இப்படத்தை மீண்டும் ரீமேக் செய்கிறார்கள். எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சினேகா பிரிட்டோ என்ற பெண் தற்போது இப்படத்தை இயக்கி வருகிறார். இதில் ஹீரோவாக தமன்குமார் நடிக்கிறார். ஹீரோயின்களாக பிந்துமாதவி, பியா இருவரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் முக்கிய காட்சிகள் ஹாங்காங்கில் படமாக்கப்பட்டு வருகிறது. ஹாங்காங்கில் உள்ள லாஸ்வேகாஸ் என்ற பகுதியில் இரவு நேரத்தில் நடிகைகள் பியா, பிந்து மாதவி இருவரும் ஒரு ஹெலிகாப்டரை பிடித்துகொண்டு தொங்குவது போன்ற காட்சியை படமாக்கியபோது, எதிர்பாராதவிதமாக இரண்டு பேருமே கீழே விருந்தார்கள். அதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. ஹெலிகாப்டர் மிக குறைந்த உயரத்தில் பறந்ததால், இருவரும் உயிர் தப்பினார்கள். படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது இருவரும் ஓய்வெடுத்து வருகிறார்கள்.

Comments