Monday,17th of September 2012
சென்னை::ஆறடி ஆல்கஹால் என்று வரிணிக்கப்படும் நமீதாவுக்கும், கிரணுக்கும் இடையே சமீபத்தில் கவர்ச்சியால் பெரிய மோதலே வெடித்திருக்கிறது. இந்த கவர்ச்சி சண்டையில் இவர்களுடன் மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா, ஆர்த்தி, ஷிவானி ஆகிய நடிகைகளும் ஈடுபட்டு 'இளமை ஊஞ்சல்' படத்தில் ஒரு கவர்ச்சி யுத்தத்தையே நடத்தியிருக்கிறார்களாம்.
மங்கை ஹரிராஜன் இயக்கும் திகில் படம் 'இளமை ஊஞ்சல்'. இது ஒரு திகில் படமாக இருந்தாலும் தலைப்புக்கு ஏற்றவாறே படத்தில் இளமைக்கு ஏற்ற கவர்ச்சிக்கும் பச்சம் இருக்காதாம்.
ஸ்ரீ ப்ரியம் கிரிரேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல திரைப்பட வினியோகஸ்தர் எஸ்.ஆர்.மனோகரன் தயாரிக்கும் இப்படத்தில் நமீதா, கிரண், மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா, ஆர்த்தி ஆகிய ஐந்து ஹீரோயின்கள் நடித்திருக்கிறார்கள். அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டிருக்கும் திகில் படமான இப்படத்தில் இந்த ஐந்து நடிகைகளும் முழுக்க முழுக்க ஒரு கவர்ச்சி போராட்டத்தையே நடத்தியிருக்கிறார்கள் என்று சொல்லலாம்.
அதிலும் நடிகை நமீதாவும், கிரணும் தமிழ் சினிமாவில் விட்ட இடத்தைப் எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று கவர்ச்சியில் போட்டி போட்டுகொண்டு நடித்திருக்கிறார்கள். தாங்கள் மட்டும் என்ன சலைத்தவர்களா? என்ற அளவில் மற்ற நடிகைகளும் இவர்களுடன் கவர்ச்சியில் போட்டி போட்டிருக்கிறார்கள்.
இவர்களுடைய இந்த கவர்ச்சியைப் பார்த்து இயக்குநர் ஹரிராஜன், "திகில் படம் எடுக்கலாம் என்று நினைத்தால் இப்படி கவர்ச்சி படம் எடுக்க வச்சிட்டாங்களே!" என்று புலம்பாத குறையாக படத்தை எடுத்துகொண்டிருக்கிறாராம்.
கார்த்திக்பூபதிராஜா இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை கவிஞர் பிறைசூடன் எழுதியிருக்கிறார். ஜே.ஜி.கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
தற்போது முடியும் நிலையில் உள்ள இப்படத்தைப் பற்றி கூறிய இயக்குநர் மங்கை ஹரிராஜனும், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.மனோகரனும், "திடுக்கிடும் சம்பவங்களைக் கொண்ட திகில் படமாக 'இளமை ஊஞ்சல்' படம் உருவானாலும், இந்த படத்தின் கதைக்கு கட்டாயம் கவர்ச்சி தேவை என்பதால், இதில் நடித்திருக்கும் நடிகைகள் கதையின் தன்மையைப் புரிந்து கொண்டு காட்சிகளுடன் முழுமையாக ஒன்றிப் போய், படம் பார்ப்போரைக் கிரங்கடிக்க வைக்கும் அளவிற்கு கவர்ச்சியாக நடித்திருக்கிறார்கள்.
2012ஆம் ஆண்டின் இளம் நெஞ்சங்களைக் கொள்ளை கொள்ளப்போகும் ஒரு படமாக 'இளைமை ஊஞ்சல்' விரைவில் வெளியாக இருக்கிறது." என்றார்கள்.

Comments
Post a Comment