ஷங்கரின் 'ஐ' இந்தி ரீமேக்கில் மகேஷ் பாபு??

Thursday,13th of September 2012
சென்னை::விக்ரம்-எமி ஜாக்சனை வைத்து 'ஐ' படத்தை இயக்கி கொண்டிருக்கும் ஷங்கர், இந்தியிலும் இப்படத்தை ரீமேக் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்தியில் விக்ரமுக்கு பதிலாக மகேஷ் பாபுவை நடிக்க வைக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

ஷங்கர், தான் இயக்கிய 'முதல்வன்' படத்தை இந்தியில் 'நாயக்' என்ற பெயரில் ரீமேக் செய்தார். அந்த படம் பெரும் தோல்வியடைந்தது. பிறகு ஷங்கரின் வேறு எந்தப் படமும் இந்தியில் ரீமேக் செய்யப்படவில்லை. ஆனால், அவருடைய அனைத்துப் படங்களும் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் ஷங்கர் விக்ரம்-எமி ஜாக்சனை வைத்து இயக்கி கொண்டிருக்கும் 'ஐ' படத்தை இந்தியில் மகேஷ் பாபு-எமி ஜாக்சனை வைத்து ரீமேக் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

இதை மறுத்திருக்கும் இயக்குநர் ஷங்கரின் அலுவலக வட்டாரம், இது வெறும் வதந்தி என்றும், ஷங்கருக்கு அப்படி ஒரு திட்டமே கிடையாது. அப்படியே ஐ படத்தை இந்தியில் வெளியிட்டாலும், அதை டப்பிங் செய்துதான் வெளியிடுவார், நேரடியாக ரீமேக் செய்ய மாட்டார் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

Comments