விஜய்யுடன் ஜோடி சேர பேச்சு : மீண்டும் போட்டிக்கு தயாராகிறார் சமந்தா!!!

Wednesday,12th of September 2012
சென்னை::விஜய்யுடன் அடுத்த படத்தில் ஜோடியாக நடிப்பதில் ஹீரோயின்களுக்குள் போட்டி எழுந்துள்ளது. இதையும் மீறி அவர் ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. ‘துப்பாக்கி படத்தை அடுத்து விஜய் நடிக்கும் புதிய படத்தை ‘கிரீடம் விஜய் இயக்குகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால், ஹன்சிகா, எமி போன்ற ஹீரோயின்கள் இடையே போட்டி ஏற்பட்டது. இந்த போட்டியை மீறி விஜய் ஜோடியாக நடிக்க உள்ளார் சமந்தா. சமீபத்தில் இயக்குனர் தரப்பில் சமந்தாவிடம் இது பற்றி பேச்சு நடந்துள்ளது. இது பற்றி சமந்தா தரப்பில் கூறும்போது, ‘இது பற்றி பேசப்பட்டிருக்கிறது. இன்னும் உறுதியாகவில்லை. சமந்தாவின் கால்ஷீட் தேதியை இப்படத்துக்கு உடனே தரும் வகையில் ஃப்ரியாக வைத்திருக்க கேட்டிருக்கிறார்கள். கதை பற்றி இன்னும் எதுவும் அவரிடம் பேசவில்லைÕ என்றனர். இயக்குனர் விஜய்யிடம் கேட்டபோது, ‘இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா, எடிட்டர் ஆண்டனி ஆகியோர் மட்டுமே இதுவரை விஜய் படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தயாரிப்பு நிறுவனம் சில நட்சத்திரங்களை அணுகி உள்ளனர். ஆனால் இன்னும் யாரும் இறுதி செய்யப்படவில்லைÕ என்றார். ஒரே நேரத்தில் மணிரத்னத்தின் Ôகடல்Õ, ஷங்கரின் Ôஐ,Õ வெங்கட் பிரபுவின் ÔபிரியாணிÕ படங்களிலிருந்து விலகினார் சமந்தா. ஸ்கின் அலர்ஜி காரணமாக அவர் இப்படங்களிலிருந்து விலகினார். இதனால் முன்னணி நடிகைகள் போட்டியில் இருந்த சமந்தா, பின்வாங்க தொடங்கிவிட்டார் என பேச்சு எழுந்தது. இப்போது குணமாகி, அவர் திரும்ப நடிக்க வந்ததும் போட்டி களத்துக்கும் தயாராகிவிட்டார் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுக¤றது.

Comments