Saturday,15th of September 2012
சென்னை::லாஜிக் இல்லாத கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்தார் விக்ரம் என்றார் இயக்குனர் விஜய். ‘தாண்டவம்Õ படத்தை இயக்குகிறார் விஜய். விக்ரம் ஹீரோ. அனுஷ்கா, எமி ஜாக்ஸன் ஹீரோயின். இப்படம் பற்றி விஜய் கூறியதாவது: தெய்வத் திருமகள் பட ஷூட்டிங்கின் போதே விக்ரமின் அடுத்த படத்தை இயக்க பேச்சு நடந்தது. பார்வையற்ற ஒருவர் தனது செவி வழியாக கேட்கும் ஒலிகள் மூலமாக அருகில் இருப்பதை உணர்ந்துகொள்ளும் வேடத்தில் நடிக்க கூறினேன். கேரக்டர் நன்றாக இருக்கிறது. ஆனால் இது நிஜத்தில் சாத்தியமா என்பதற்கு ஆதாரம் இல்லை. லாஜிக் இல்லாமல் எப்படி நடிப்பது என்றார். அமெரிக்காவில் குழந்தை பருவத்திலேயே தனது பார்வையை இழந்த டேனியல் கிஷ் என்பவர் எகோ லொகேஷன் எனப்படும் செவி வழி பார்க்கும் திறன் கொண்ட கலையை கையாண்டு வாழ்ந்து வருகிறார். வாயில் ஒலி எழுப்பி ஒலி அலைகள் மூலம் அருகிலிருக்கும் பொருளை உணரும் திறன்தான் இக்கலை. இதுபற்றி அறிய அமெரிக்கா சென்று டேனியல் கிஷ்ஷை சந்தித்து அவரது செயல்பாடுகளை வீடியோவில் பதிவு செய்தேன். அதை விக்ரமிற்கு காட்டியபிறகு ஒப்புக்கொண்டார். டேனியல் கிஷிடம் பயிற்சி பெற்ற பிறகே நடித்தார் விக்ரம். டேனியல் கிஷும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். காதல், ஆக்ஷன் என கமர்ஷியல் அம்சத்துடன் படம் உருவாகி இருக்கிறது. தயாரிப்பு யுடிவி. இசை ஜி.வி.பிரகாஷ். ஒளிப்பதிவு நீரவ் ஷா. இவ்வாறு இயக்குனர் விஜய் கூறினார்

Comments
Post a Comment