கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Saturday,1st of September 2012
சென்னை::பிரபுதேவா இயக்கும் பாலிவுட் படத்தில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன் படம் முழுவதும் சல்வார் கமிஸ் அணிந்து எளிமையான தோற்றத்தில் நடிக்கிறாராம்.

நிமிர்ந்து நில் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் ஜெயம் ரவி கோவாவிலேயே வாரக்கணக்கில் தங்கி இருக்கிறாராம். அவரை மனைவி ஆர்த்தி நேரில் சென்று சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்தாராம்.

பட நிறுவனங்களுக்கு சென்டிமென்ட் பார்த்து நல்ல பெயராக வைப்பது வழக்கம். ஆனால் புதுமுகங்கள் நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ள ஒரு பட நிறுவனம் ‘லாஸ்ட் பெஞ்ச் பையன்கள்’ (கடைசி பெஞ்ச் மாணவர்கள்) என்று வைத்திருக்கிறது.

திருத்தணி ஷூட்டிங் கில் ஏற்பட்ட கேப்பை பயன்படுத்தி புதிதாக 2 ஸ்கிரிப்ட் தயாரித்திருக்கிறாராம் இயக்குனர் பேரரசு.

மெரினா படத்தையடுத்து பாண்டிராஜ் இயக்கும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் விமல் சிவ கார்த்திகேயன் ஜோடியாக பிந்து மாதவி, ரெஜினா நடிக்கின்றனர்.

அபியும் நானும், பனித்துளி படங்களில் நடித்த கணேஷ் வெங்கட்ராமன் அடுத்து தமிழ், கன்னடம் இருமொழியில் தயாராகும் ‘சந்திரா’ படத்தில் இளவரசர் வேடத்தில் நடிக்கிறார்.

லாரன்ஸ் இயக்கிய ‘காஞ்சனா’ படத்தை கன்னடத்தில் ‘கல்பனா’ என்ற பெயரில் தயாரித்து இயக்கி இருக்கிறார் ராம நாராயணன்.

மலையாளத்தில் ஹிட்டான ‘டிராபிக்’ படம் தமிழில் சரத்குமார் நடிக்க ரீமேக் ஆகிறது. இதற்காக சென்னை தரமணியில் உள்ள திரைப்பட கல்லூரி ஸ்டுடியோவில் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைபோன்ற அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் இருக்கும் பிரியாமணி ஷூட்டிங்கிற்கு விடுமுறை எடுத்துக்கொண்டு குடும்பத்தினருடன் ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.

Comments