காமெடி நடிகர் என்பதால் என்னோடு முன்னணி நடிகைகள் நடிக்க மறுக்கிறார்கள் - கருணாஸ்!!!

5th of September 2012
சென்னை::காமெடி நடிகர் என்பதால் தன்னுடன் முன்னணி நடிகைகள் யாரும் நடிக்க மறுப்பதாக கருணாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

ரகளபுரம் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் கருணாஸ். இதில் அவருக்கு ஜோடி அங்கனா என்ற புதுமுக நடிகை. ஏற்கெனவே திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் நாயகனாக நடித்தார்.

இந்தப் படங்களில் நாயகியாக நடிக்க பல முன்னணி நடிகைகளை அவர் அணுகியும் அவர்கள் மறுத்து விட்டார்களாம்.

இதுகுறித்து கருணாஸ் கூறுகையில், "என் படங்களில் எனக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளை அணுகினேன். அவர்களோ மறுத்து விட்டனர்.

தற்போது ‘ரகளபுரம்' படத்தில் புதுமுக நாயகியை ஜோடியாக்கி உள்ளேன். எனது படங்கள் நன்றாக ஓடினாலும் காமெடி நடிகர் என்று நினைத்து என்னை கதாநாயகிகள் ஒதுக்குகிறார்கள்.

காமெடி படங்கள்தான் தற்போது நன்றாக ஓடுகின்றன. ‘கழுகு' படம் போன்று நல்ல கேரக்டர்கள் அமைந்தால் வேறு படங்களிலும்

Comments