Saturday,22nd of September 2012
சென்னை::கோலிவுட்டில் தொடை பெருத்த நடிகைகள் காலம் மலையேறிவிட்டது’ என்றார் நிஷா அகர்வால். பாலிவுட் படங்களில் சமீபகாலமாக கோலிவுட் படங்களின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. ஷாருக் கான், சல்மான் கான், ஆமிர் கான் உள்ளிட்ட நடிகர்கள் தமிழ் பட ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். ஹீரோயின்களும் இதுபோன்ற படங்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். இதுபற்றி இயக்குனர் கவுதம் மேனன் கூறும்போது,‘பாலிவுட் படங்களில் தென்னிந்திய படங்களின் தாக்கம் இருக்கிறது. தென்னிந்திய ஹீரோக்களின் பாணியிலேயே அங்குள்ளவர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள்’ என்றார். ‘நிறைய தென்னிந்திய படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்படுகின்றன. ஆனாலும் அங்கு சித்தரிக்கப்படுவது தென்னிந்தியாவில் 20 வருடங்களுக்கு முன்பிருந்த பாணி. தற்போது தென்னிந்திய நடிகைகள் பாலிவுட் நடிகைகளுக்கு சமமாக இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது’ என்றார் ஹன்சிகா.
‘இஷ்டம்’ பட ஹீரோயினும், காஜல் அகர்வால் தங்கையுமான நிஷா அகர்வால் கூறும்போது,‘பெரும்பாலான வடக்கத்திய ஹீரோயின்களுக்கு தென்னிந்திய நடிகைகள் குண்டாகவும், தொடை பெருத்தவர்களாகவும் இருப்பார்கள் என்ற எண்ணம் நிலவுகிறது. ஆனால் இன்றைக்கு தென்னிந்திய நடிகைகள் அத்தகைய தோற்றத்தில் இருந்து மாறிவிட்டார்கள். தொடை பெருத்த நடிகைகள் காலம் மலையேறி விட்டது. உலகளவில் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு தங்களது உடற்கட்டை அவர்கள் அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல் தென்னிந்திய ஹீரோக்கள் கருப்பாக முரட்டு மீசையுடன் குண்டாக இருப்பார்கள் என்ற பாலிவுட் நடிகர்களின் எண்ணமும் தென்னகத்தில் இப்போது மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது’ என்றார்.
Comments
Post a Comment